பிரபல இளம்நடிகை மரணம்….! இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு!

647

பிரபல நடிகை திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி. இவர் ஹே அப்னா தில் தோ அவாரா உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை நடிகை திவ்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்.

இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வலி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. பலர் அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here