பிரபல சீரியல் நடிகை திருமணம் செய்யப்போகும் தமிழ்ப் பையன் இவர் தான்!

1038

பிரபல சீரியல் நடிகையான சரண்யா, தான் பேச்சாளரை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகை சரண்யா. அதன் பின் பல்வேறு தொடர்களில் நடித்து வரும் இவர், தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராகுல் சுதர்ஷனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.


அதில், அவர், என்னோட நிறைய நேர்காணல்களில் பேசும்போது, ப்ரவுன் கலர்ல, நிறைய தாடி வைத்த ஒரு தமிழ்ப் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறிக் கொண்டே இருப்பேன்.

அது இப்போது உண்மையாகிவிட்டது. எனக்கு எப்படி தமிழில் கவிதை, கட்டுரை என இதழியல் சார்ந்து ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, அதேபோல, ராகுல் சுதர்ஷனுக்கு ஆங்கிலத்தில் நிறைய புலமை உண்டு. இருவரும் மாறி மாறி அப்படித்தான் கவிதைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.

இந்த எதார்த்தத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டு எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் காதல் விஷயத்தை வெளிப்படுத்தியதும், திருமணம் எப்போது? எனப் பலரும் கேட்கின்றனர்.

அதுக்கு உடனே அவசரமில்லை. இன்னும் சில மாதங்களுக்கு காதலர்களாகவே பயணிக்க உள்ளோம். எங்கள் இரு வீட்டிலும் திருமண வேலைகள் குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் இருக்கும் என்று கூறியுள்ளார்.