பிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது!!

897

பிரபல தமிழ் சீரியலான வாணி ராணியில் நடித்திருந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

விளையாட்டு, சினிமா என அனைத்து துறையும் முற்றிலுமாக முடங்கியிருந்தது, எனினும் மிக குறைவான நபர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த பல்வேறு மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீரியல் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த முன்னணி தெலுங்கு சீரியல் நடிகை நவ்யா சாமி கொரோணா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர் தமிழில் வாணி ராணி அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர். தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கடந்த மூன்று நாட்களாக தலைவலி, உடல் சோர்வு இருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், அதில் முடிவுகள் பாசிட்டிவாக வந்துள்ளது. தற்போது அறையில் தனிமைப்படுத்திக் கொண்டேன், எந்த அறிகுறிகளும் இப்போது இல்லை.

முடிவுகள் வந்ததும் நான் செய்த முதல் வேலை படப்பிடிப்பை நிறுத்தியது தான், கொரோனாவை பரப்பும் நபராக நான் இருக்க விரும்பவில்லை. நேற்றிரவு முழுவதும் கதறியழுதேன், என் அம்மா இன்னும் அழுது கொண்டிருக்கிறார், பலரும் என்னுடன் பேசுகிறார்கள்.

நான் என்னுடன் நடித்த சக நடிகர்களையும் பிரச்சனையில் சிக்கவைத்துவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சியும் இருக்கிறது. சக நடிகர்களும், தயாரிப்பாளர்களும் உறுதுணையாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் சீரியலில் போட்டி அதிகம் என்பதால் வேறு வழியின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.