பிரபல நடிகர் வறுமையில் வாடும் வேதனை… மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பிய சோகம்..!

1110

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.

பல மாதங்களாக வேலை இல்லாத நிலையில் பிரபல நடிகர் ஆஷிஷ் ராய் வறுமையில் வாடி வருகிறார். நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது பணம் கட்ட முடியாத சூழலில் திரும்ப வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளார்.

அவர் கூறுகையில் “வீட்டிற்கு திரும்பி விட்டேன். ஆனாலும் பணப் பிரச்சினை இன்னும் தொடர்கிறது. தினமும் நீரிழிவு நோய் காரணமாக டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது. இரண்டு மாதங்கள் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியிருக்கிறார். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பணம் இல்லாமல் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறேன். சிலர் உதவி செய்கின்றனர். அவர்களும் குறிப்பிட்ட அளவிற்கு தான் செய்ய முடியும். எல்லாரும் முயற்சி செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.