ஒடியா திரைப்பட நடிகை மற்றும் ஆல்பம் நடிகையான தீபா சாஹூ கடந்த ஆறு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில் திடீரென்று கடந்த சனிக்கிழமை அன்று அவர் உடல்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனையடுத்து அவரை பாஜக தலைவர் அகில் பட்நாயக் மற்றும் சமூக ஆர்வலர் பிரசாந்த் நாயக் ஆகியோர் கேப்பிட்டல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இருப்பினும் அவர் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை தீபா ஓடியா திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆல்பம் களிலும் நடித்து தன்னுடைய தனித்தன்மையை வெளி உலகிற்கு காண்பித்திருக்கிறார். மேலும் பல சீரியல்களிலும் நடித்து இருக்கிறார் நடிகை தீபா. இத்தகைய திறமை வாய்ந்த நடிகை கடந்த ஒரு வருடமாகவே இந்த புற்றுநோயுடன் போராடி வந்துள்ளார். இதற்கான தகுந்த சிகிச்சைகள் எடுத்து வந்த நிலையிலும் திடீரென்று அவரது உடல்நிலை மோசமாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தீபா பல சம்பல்பூரி வீடியோ பாடல்கள் உட்பட பல ஆல்பங்களை செய்திருக்கிறார் . 90 களின் பிற்பகுதியில் ‘டோரா கிருஷ்ணா சூடா ரங்காரா நலி ஓதானி’, ‘ஹை ஹை டு மல்லி ஃபுலா கஜாரா’ மற்றும் ‘ஏக்தா ஏக்தா ரா’ போன்ற ஹிட் ஆல்பங்களுடன் புகழ் பெற்றார்.
அவர் சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார். விரைவில் அவரது உடல்நலம் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.