பிரபல நடிகை அம்ரிதா பாண்டே தூக்கிட்டு தற்கொலை… கதறும் ரசிகர்கள்!!

66

பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார், நடிகையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கடந்த கால வாட்ஸ்-அப் பதிவுகளும், முகநூல் பதிவுகளும் ரசிகர்களை கலங்கடிக்க செய்து வருகிறது. அம்ரிதா பாண்டே , போஜ்புரி படங்களைத் தவிர, இந்தி படங்களிலும், வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

பீகார் மாநிலம் பகல்பூர் ஜோக்சர் காவல் நிலையப் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில், ஏப்ரல் 27, சனிக்கிழமை அன்று, அன்னபூர்ணா என்ற அமிர்தா பாண்டே சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

நடிகை அம்ரிதா பாண்டே இறப்பதற்கு சற்று முன்பு வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸும் ரசிகர்களைக் கலங்கடித்துள்ளது. ‘இரண்டு படகுகளில் அவளது வாழ்க்கை இருக்கிறது. எங்கள் படகை மூழ்கடித்து அவளுடைய பாதையை எளிதாக்கினோம்’ என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அவரது குடும்பத்தின் கருத்துப்படி, அம்ரிதா தனது தொழில் குறித்து கவலைப்பட்டதாகவும், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால் அமிர்தா மனமுடைந்தார் என்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில், மும்பையில் வசிக்கும் சந்திரமணி ஜங்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு அனிமேஷன் பொறியாளர்.

அம்ரிதா மன அழுத்தத்தில் இருந்தபோதும், அவர் சமீபத்தில் வெளியான ‘பிரதிஷோத்’ வெப் சீரிஸால் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதம்பூர் ஷிப்காட்டில் அமைந்துள்ள திவ்யதர்மா அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜோக்சார் போலீசாருக்கு ஏப்ரல் 27ஆம் தேதி மாலை தகவல் கிடைத்தது. கதவை திறந்து பார்த்தபோது நடிகை அம்ரிதா பாண்டே படுக்கையில் உயிரிழந்த நிலையில், பிணமாக கிடந்துள்ளார்.

போலீசார் குடும்பத்தினரிடம் பேசியபோது, மாலை 3.30 மணியளவில் அமிர்தா பாண்டேவின் சகோதரி அவரது அறைக்கு சென்றது தெரிய வந்தது. அங்கு தனது சகோதரி தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்தார்.

எப்படியோ கயிறு அறுக்கப்பட்டு அமிர்தாவை கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.