பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

839

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில், அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் Shibu Paul(32). சவுண்ட் இன்ஜினியரான இவர், கடந்த வருடம் தான் தன் மனைவியான லின்னெட் ஜோசப் (28)-வுடன் பிரித்தானியாவின் இங்கிலாந்து நாட்டில் குடியேறியுள்ளார்.

லின்னெட் ஜோசப், இங்கிலாந்தில் உள்ள Nottingham சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

தற்போது கொரோனா வைரஸ் பிரித்தானியாவையே ஆட்டிப் படைத்து வருவதால், அங்கு தற்போது வரை மக்கள் தங்களின் சகஜ நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதனால் Shibu Paul வேலை கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.


இருப்பினும், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார். இந்நிலையில் தான் Shibu Pau-க்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள Lamborghini Urus சொகுசு கார் மற்றும் 20,000 பவுண்ட் பணத்தை பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பு அவருக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த அமைப்பு அண்மையில், குலுக்கல் பரிசு(lucky draw) நிகழ்வு விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நடத்தியுள்ளது. இதில் Shibu Pau கலந்து கொண்டுள்ளார். இதில் அதிர்ஷ்டசாலி மற்றும் வெற்றியாளராக Shibu Pau தெரிவு செய்யப்பட்டு, Lamborghini Urus கார் மற்றும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவரிடம் கூறிய போது, அவரின் மனநிலை எப்படி இருந்தது என்பதை, இந்த அமைப்பின் யூ டியூப் சேனல் பதிவிட்டுள்ளது. அதில், நெறியாளர் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது என்று கூறி, அவரை கார் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.

இதைக் கண்டவுடன் அவரால் நம்பவே முடியவில்லை, உண்மையில் இது எனக்கு தானா? என்று Shibu Pau கேட்கிறார். அதன் பின் நெறியாளர் ஆம் உங்களுக்கு தான் என்று கூறி, அவரை காரில் ஏறி பார்க்க சொல்கிறார்.

அதன் பின் காரின் பின்னால் அந்த 20,000 பவுண்ட் தொகை ஒரு சூட்கேஸில் இருப்பதை நெறியாளர் காட்ட், மேலும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி, மனைவியை கட்டி அணைக்கிறார். இந்த கொரோனா நேரத்தில், மனைவியுடன் கஷ்டப் பட்டு வந்த அவருக்கு இந்த பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

குறித்த தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.

பிஓடிபி கார் மற்றும் லைப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது.

இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார். இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.