பிரித்தானியாவில் தண்ணீர்க்குழாய் வெடிப்பு – நதியாக மாறிய வீதிகளில் மிதந்த கார்கள் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

834

லண்டனில் ஹெண்டன் வே முதல் ப்ரெண்ட் ஸ்ட்ரீட் (Hendon Way to Brent Street) வரையிலான முழுப் பகுதியும் வெள்ள நீர் காரணமாக வடக்கு சுற்றுவட்ட பாதை (ஏ 406) இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பரபரப்பான சாலை ஒரு நதியைப் போல தோற்றமளிப்பதாக கூறப்படுகின்றது. கார்கள் தண்ணீரில் மிதக்கின்றன என அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளன.


சம்பவ இடத்திற்கு 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வருகை தந்துள்ளனர். மிகப்பெரிய குழாய் ஒன்று வெடித்தமையின் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், ஒவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. வீதி மூடப்பட்டுள்ளமையின் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.