பிரித்தானியாவில் பயங்கரம்! காரின் உள்ளே இருந்தவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் நபர்கள்: அதிர்ச்சி வீடியோ!!

948

பிரித்தானியாவில் காரின் உள்ளே இருந்த நபரை சிலர் தோட்ட முட்கரண்டி கொண்டு பயங்கரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. பிரித்தானியாவின் Manchester-ன் Stanton வீதியில் கடந்த 7-ஆம் திகதி பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து Manchester பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஜூலை 7-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில், மான்செஸ்டரின் ஸ்டாண்டன் தெருவில் கடுமையான தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட விசாரணையில் பல கார்களில் வந்த ஆண்கள் குழு, ஒரு காரை சுற்றி, அந்த காரின் உள்ளே இருந்த 27 வயது நபரை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும், இந்த சம்பவத்தை அங்கு குடியிருப்பு ஒன்றில் இருக்கும் நபர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில்,

pitchfork என்றழைக்கப்படும் தோட்ட முட்கரண்டியை வைத்து, பல ஆண்கள் அந்த காரின் உள்ளே இருக்கும் நபரையும், காரையும் தாக்குவது போன்று உள்ளது.

பொலிசார் வருவதை அறிந்தவுடன் அங்கிருந்து சிலர் அப்படியே காரை எடுத்துவிட்டு ஓடுவது போல் தெரிகிறது. முழு விசாரணைக்கு பின்னரே இதன் பின்னணி தெரியவரும். இருப்பினும் பார்ப்பதற்கு இந்த வீடியோ பயங்கரமாக உள்ளது.