பிரித்தானியாவில் ரிவர்ஸ் வந்த கார் மோதி ‘குட்டி தேவதை’ பலி!

345

உங்களுக்கு பிரித்தானியாவில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது குழந்தை பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Warwickshireஇல் தன் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ப்ரியா கவுர் கில் என்ற குழந்தை மீது ரிவர்சில் வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இதில் ப்ரியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், ப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இதற்கிடையில், Leamingtonஐச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிசார், மீண்டும் விசாரணைக்கு வரவேண்டியிருக்கும் என்று கூறி அவரை விடுவித்துள்ளனர்.


இந்த சம்பவம் யார் வீட்டு CCTV கமெராவிலோ அல்லது காரிலுள்ள டேஷ் கேமிலோ பதிவாகியிருந்தால் அந்த வீடியோவை கொடுத்து உதவுமாறு பொலிசார் அப்பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ப்ரியாவின் குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், எங்கள் அழகான குழந்தை, மிக அழகிய தேவதையாகிவிட்டாள்.

எங்கல் வீட்டின் முன்னாலேயே அவள் இறந்துபோனால் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மொத்த குடும்பமும் கடும் அதிர்ச்சியிலிருக்கிறோம், எங்கள் தனிமைக்கு மதிப்பளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.