பிரித்தானியாவில் Totnes பொலிசார் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! குறி வைக்கப்படும் குழந்தைகள்: கவனமா இருங்க….!

878

போதைப் பொருள் விற்பனையாளர்கள் லோகோ செங்கற்கள் போன்று தோற்றமளிக்கும் மாத்திரைகளை வைத்து குழந்தைகளை குறிவைப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

போதைப் பொருள் எப்படியெல்லாம் கடத்தலாமோ அப்படி எல்லாம் போதை பொருள் கும்பல் கடத்தி வருகிறது. அப்படி கடத்தப்ப்டடு வரும் போதைப் பொருட்களை எப்படி அதிகாரிகளிடம் இருந்து சிக்காமல் விற்பதற்கு பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பிரித்தானியாவின் South Devon-ன் Totnes பகுதியில் பெண் ஒருவரை பொலிசார் தடுத்து நிறுத்தி, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது, சுமார் 1000 டொலர் மதிப்பு கொண்ட ketamine மற்றும் 75 MDMA மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து Totnes பொலிசார் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில், கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளோம், குறிப்பாக Totnes இளைஞர்களை போதை பொருள் கும்பல் குறிவைக்கலாம்.


பார்ப்பதற்கு இனிப்பு போல் தோற்றமளிக்கும் இந்த மாத்திரை தீங்கு விளைவிக்க கூடியது. Totnes-ல் இது வெளிப்படையாக உள்ளது. தயவுசெய்து இந்த மருந்துகள் குறித்து தெளிவாக இருங்கள். இது அவர்களை கொல்லவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது அப்பகுதியில் மட்டுமின்றி பிரித்தானியர்கள் பலரும் ஒரு எச்சரிக்கை தகவலாகவே இருக்கும். பார்ப்பதற்கு செங்கற்கள் போல பரவசமான தோற்றத்தை கொண்டுள்ளது. இதை யாரும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிடமுடியாது.

இது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறிவைக்கப்படலாம் என்றும், கைது செய்யப்பட்ட அந்த பெண் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.