புடவையில் நச்சுனு போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய கேப்ரியல்லா!!

136

கேப்ரியல்லா..

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சிலர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுவயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். எனவே, சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சிறுவயது முதலே சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு இருந்தது.

தனுஷும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த 3 படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் கேப்ரியல்லா நடித்திருந்தார். நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது தொடர்ந்து நடந்து வந்தது. டின் ஏஜை எட்டியவுடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. வாய்ப்பு கொடுக்க முடியாது எனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள் என சொல்வார்கள்.

அப்படித்தான் சிவகார்த்திகேயன் கேப்ரியல்லாவிடம் ‘பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல இருக்க. இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும். இப்ப போய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்’ என சொல்லிவிட கேப்ரியல்லாவும் பிக்பாஸ் வீட்டுக்கு போனார். பல நாட்கள் அந்த வீட்டில் தாக்குபிடித்த கேப்ரியல்லா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.


ஆனால், திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரே வெளியேறினார். அதன்பின்னரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். இப்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காட்டி கேப்ரியல்லா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவிக்கும். அந்தவகையில், புடவை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து கேப்ரியல்லா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.