‘பெண்குயின்’ இயக்குநர் பேட்டி.. ஒரே டேக்கில் எல்லாக் காட்சிகளையும் நடித்த செல்ல நாய் !

889

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் நேரடியாக ஆன்லைனின் வெளியானது.

‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்திருந்தது. இதற்காக தனது சொந்த நாயை நடிக்க வைத்துள்ளதாக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:


”அந்த நாயின் உண்மையான பெயர் மேடி. அது எனது சொந்த நாய். அதற்கு எனது உடல்மொழி நன்றாகத் தெரியும். அதன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நான் அறிவேன்.

படத்துக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை நான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னால் அப்படியான நாய்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பட வேலைகள் தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் நான் மேடியைத் தேர்வு செய்தேன். அது மிகவும் அற்புதமாக நடித்திருந்தது. அதற்கு அதிக கட்டளையிட வேண்டிய தேவை ஏற்படவில்லை. அது இயல்பாகவே நடித்தது. அது எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்தது. இவ்வாறு ஈஸ்வர் கார்த்திக் கூறியுள்ளார்.