பெரிய வெங்காயத்திற்குள் சிக்கிய மஞ்சள்..

876

இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள் கொண்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரிய வெங்காயக் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மஞ்சள் இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறக்குமதியாளர்கள் வெங்காயக் கொள்கலன்களின் நடுவில் மஞ்சளை ஒளித்து வைத்து இறக்குமதி செய்வதாக சுங்க பிரிவின் பிரதி ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியதன் காரணமாக இறக்குமதியாளர்கள் இவ்வாறு திட்டமிட்டு இரகசியமான முறையில் இறக்குமதி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கலன்களில் மறைத்து வைத்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.