போராட்டம் நடத்திய மாணவி.. தலை முடியை பிடித்து இழுத்துச் சென்ற போலிஸ்.. அதிர்ச்சி சம்பவம்!!

229

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இங்கு நீதிமன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளது.

இந்த மரங்களை வெட்டித்தான் புதிய கட்டடம் கட்டமுடியும். இதனால் புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது போராட்டத்திற்குள் நுழைந்த போலிஸார் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அப்போது மாணவி ஒருவர் போலிஸாரிடம் இருந்து சிக்காமல் இருக்க தப்பிச் ஓடியுள்ளார். அவரை இரண்டு பெண் போலிஸார் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.


பின்னர் அருகே சென்ற போலிஸார் மாணவியின் தலை முடியைப் பிடித்து இழுத்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவிக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலானதை அடுத்து போலிஸாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.