மகேஷ் பட் மற்றும் சுஷாந்தின் காதலிக்கும் இடையே என்ன உறவு.. இரண்டரை மணிநேர விசாரணையில் அம்பலம்!

885

கடந்த மாதம் ஜீன் 14 ம் திகதியில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் தற்கொலையை அறிந்த திரையுலகினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலேயே ஆழ்த்தியது.

இதையடுத்து, இவரின் தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்த பொலிசார், பாலிவுட் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும், அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை போலீசார் பிரபலங்கள் உட்பட சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.


இதையடுத்தும், சுஷாந்தின், காதலி ரியா சக்ரபோர்த்தி பிரிந்து சென்றதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல்வேறு யூகங்கள் அடிபடுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தையும் இயக்குநருமான மகேஷ் பட்டிடம் மும்பை போலீசார் சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ” நடிகை ரியா சக்ரபோர்த்தி வழியாக சுஷாந்தை தெரியும். இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன். ரியாவை என்னுடைய ஜிலேபி படத்தில் அறிமுகப்படுத்தினேன்.

அதனால் அவர் என்னை குருவாக பார்க்கிறார்,” என தெரிவித்து இருக்கிறார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நீண்டது குறிப்பிடத்தக்கது