மண்வெட்டி எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!

1144

யாழ்ப்பாணம், ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை தோட்டத்திற்கு வந்த குறித்த இளைஞன் நீர் இறைப்பதற்குரிய ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கிணற்றுக்குள் மண்வெட்டி தவறுதலாக விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக மேற்கொண்ட போதே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சகாதேவன் தர்மசீலன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.