இயற்கையின் பேரழகையும், அதிசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் மீன் ஒன்று மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது. மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள்,
பற்களை பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.