மனைவிக்கு குழந்தை பிறந்த 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்! அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

416

இந்தியாவில் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அகர்டலாவை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா. இவர் மனைவி சுப்ரியா தாஸ். கர்ப்பமாக இருந்த சுப்ரியா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த கோபிந்தா மற்றும் அவரின் குடும்பத்தார் இதனால் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் மனைவியிடம் தொடர்ந்து கோபிந்தா சண்டை போட்டு வந்தார்.

மேலும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே என மன வேதனையடைந்த கோபிந்தா தான் தந்தையான 4 நாட்களில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலை அறிந்த சுப்ரியா கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுப்ரியா வீட்டருகில் வசிக்கும் நபர்கள் கூறுகையில், பெண் குழந்தையை ஏன் பெற்றெடுத்தாய் என கூறி சுப்ரியாவை அவர் மாமியார் மிக மோசமாக திட்டி வந்தார், பெண் குழந்தை நமது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் என கூறி வந்தார் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.