மருத்துவமனைக்கு வெளியே நினைந்த படி தரையில் கிடந்த இளம் பெண்! பரிதாப புகைப்படத்தின் பின்னணி

974

இந்தியாவில் அவசர சிகிச்சை முன்பாக மழையில் நினைந்த படி பெண் ஒருவர் தரையில் கிடந்த சம்பவத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பீகார், சிவான் மாவட்டத்திலுள்ள சடார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு முன்பாக மழையில் நனைந்தபடியே, பெண் ஒருவர் தரையிலே கிடந்தார்.

பல மணி நேரங்களாக மருத்துவமனைக்கு வெளியிலேயே கிடந்த இவரை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த மோசமான காட்சியை பார்த்த ஒருவர், மழையில் நனைந்தபடி கிடந்த இப்பெண்ணை படமெடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்த சம்பவத்தை ட்விட்டரில் பதிவிட்ட சிப்லீ, நான் மருத்துவமனை நிர்வாகத்தினர் பலரிடமும் உதவும்படி கேட்டேன்,

அவர்கள் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கைவிரித்தனர். இன்னும் கொஞ்சநேரம் அந்த பெண்ணை கவனிக்காமல் விட்டிருந்தால் அவர் இறந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண் பற்றிய புகைப்படம் வைரலாக தொடங்கியதும் மருத்துவமனை இவரை அனுமதித்து சிகிச்சையை தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.