நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, பிரபல ஹீரோ பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை எடுத்தாலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மும்பையில், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவிற்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வரும் நிலையில், அமிதாப், அபிஷேக் பச்சன் விரைவில் குணமடைய தனியாக ட்வீட் செய்த பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் குணமடைவதற்கு தனியாக ட்வீட் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் வந்துள்ள செய்தியை டேக் செய்து, விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Our prayers for the well being and quick recovery of the family? https://t.co/23BEckqTLa
— Vivek Anand Oberoi (@vivekoberoi) July 12, 2020
விவேக் ஓபராயும் ஐஸ்வர்யா ராயும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.