மாகாளி பட போஸ்டர் சர்ச்சை.. உயிரோட இருக்கனுமா வேண்டாமா? நடிகைக்கு கொலை மிரட்டல்!!

77

இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரைமா சென். பெங்காலி திரையுலகில் மகாநாயகி என போற்றப்பட்ட சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காட்மதர் சபனா ஆசுமி, சோக்கர் பாலி ஆகிய திரைப்படங்கள் நடிகை ரைமா சென்னிற்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ஹிந்தியில் மாகாளி என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார்.

1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.

விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க, அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது.