மீன் வியாபாரியாக மாறிய சினிமா நடிகர்! கொரோனா ஊரடங்கால் நேர்ந்த பரிதாபம்!!

921

கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வைத்திருக்கும் சம்பவம் யாரும் எதிர்பாராத ஒன்று தான். அனைத்து மக்களும் தொழில் முடக்கத்தால் பொருளாதார சிக்கலில் உள்ளனர்.

சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.

சிலர் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறி விற்பனை என குடும்ப வாழ்க்கைக்காக தங்களை பிழைப்பை மாற்றியுள்ளனர்.


இந்நிலையில் மராத்தி டிவி நடிகர் ரோஹன் பெட்நேகர் தற்போது மீன் வியாபாரியாக மாறியுள்ளார்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் இருந்தும் வாழ்க்கைக்காக ஏதாவது செய்து பிழைக்க வேண்டும் என்பதால் அவர் இப்படி முடிவு எடுத்துவிட்டாராம்.