மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு… உலக சாதனை படைத்த இந்தியர்!!

204

மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்த இளைஞர் 3-வது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 2023 -ம் ஆண்டு வினோத் குமார் சவுத்ரி (44) என்பவர் தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து முதல் முறையாக சாதனை புரிந்தார்.

இதையடுத்து, அதே ஆண்டில் 2 -வது முறையாக 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து தனது முதல் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், மீண்டும் தனது மூக்கை கொண்டு 25.66 வினாடிகளில் தட்டச்சு செய்து முதல் 2 சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வினோத் குமார் சவுத்ரி பேசுகையில், “எனது தொழில் தட்டச்சு செய்வது தான். அதில் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் ஆர்வத்தை மட்டும் கடைசி வரை வைத்திருக்க வேண்டும்.

சில சமயம் மூக்கை வைத்து தட்டச்சு செய்யும் போது மயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், பயிற்சியால் சாத்தியமாகும்” என்றார். இவர், “இந்தியாவின் தட்டச்சு மனிதர்” என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.