மூச்சு முட்டி இறந்தாரா சுஷாந்த் வெளியானது இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை!

1021

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

எம்.எஸ். தோனி பயோபிக்கில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது மரணம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் மும்பை போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், சமூக வலைதளத்தில், சுஷாந்த் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாரா, அல்லது வேறு யாராவது தூக்கில் தொங்கவிட்டார்களா என கேள்வி எழுப்பி இருந்தனர்.


சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியுடன் மும்பை பொலிஸ் அதிகாரிகள் சமீபத்தில் கிட்டத்தட்ட 11 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் மருத்துவர் உள்ளிட்ட பல பேரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சேகர் சுமன் #justiceforSushantforum என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ அதிகாரிகள் விசாரித்தால் தான் உண்மை வெளிவரும், மும்பை போலீசார் இந்த விவகாரத்தில் சில விசயங்களை மூடி மறைப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கில் தொங்கிய நிலையில், மூச்சுத் திணறி தான் உயிரிழந்துள்ளார். வேறு எந்த வெளிப்புற அழுத்தமோ, போராட்டோமோ அவர் மரணத்தின் போது நிகழ்ந்ததற்கான அறிகுறி இல்லை என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள் பிரெண்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புத், ஏன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, வாரிசு நடிகரான அர்ஜுன் கபூர் அந்த படத்தில் நடித்தார் என்ற கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் இன்னொரு ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.