யாழில் வீடுகள் முழுமையாக சோதனை..! இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை!

1055

யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்து இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டனர்.

என்ன காரணம் என தெரியாத போதிலும் அண்மை நாட்களாக படையினரையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து வெடிப்புச் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


மேலும் யாழில் வாள்வெட்டுக்கள், கடத்தல், கற்பழிப்புக்கள், திருட்டுக்கள் என பலவகையான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.