யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் படுகொலை!

1046

கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக York காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி Steeles வீதி கிழக்கு Markham வீதி சந்திப்புக்கு அருகாமையில் Marydale வீதியில் உள்ள இல்லம் ஒன்றிற்கு வெளியில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மதன் மகாலிங்கம் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.