யூடியூபர் கொடூரமாக வெட்டிக்கொலை.. நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்!!

364

திருநெல்வேலியில்..

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் அருகில் உள்ள கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பதற்கான ஒரு யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருநெல்வேலி சிவந்திபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாய்பாபா கோவில் அருகே அங்கு வந்த கும்பல் முத்து பெருமாளை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது .

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து பெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். முத்து பெருமாள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த திருநெல்வேலி பெருமாள்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட முத்து பெருமாள் உடலை உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,


அங்கிருந்து சிறிது கிலோமீட்டர் தொலைவில் உள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் அரிவாளில் ரத்தம் படிந்த நிலையில் மூன்று பேர் சுற்றி திரிவதை காவல்துறையினர் பார்த்து அவர்களை பிடிக்க சென்றபோது தப்பி ஓடினர்.

விரட்டிச் சென்ற காவல்துறையினர் இரண்டு பேரை பிடித்து நிலையில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார் . விசாரணையில் முத்து பெருமாளை கொலை செய்த அதே பகுதியில் உள்ள தெற்கு காரசேரி என்ற ஊரைச் சார்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் இசக்கி பாண்டி என தெரியவந்தது.

மற்றொருவர் உய்க்காட்டான் எனவும் அவர் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது . இது சம்பந்தமாக பிடிபட்ட இருவரிடமும் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் . இந்த நிலையில் இறந்த முத்து பெருமாளின் சொந்த ஊரான புளியங்குளம் பகுதி மக்கள் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில்

ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளம் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் செய்வதை தொடர்ந்து திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.