“ரஜினியின் ஜானி பட ரீமேக்கில் அஜீத் நடிக்க ஆ சைப்பட்டார்” – விஜய் பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் !

905

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன், அஜித்தை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது பில்லா ரீமேக் செய்வதற்கு முன் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றிப்படமான ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜீத் விரும்பியதாகவும்,


அதற்காக அவர்களிடம் அனுமதி பெற இயக்குனர் மகேந்திரனின் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாகவும், மகேந்திரனும் அதற்கு முழு சம்மதத்துடன் அந்த ரீமேக்கை செய்ய அனுமதி தந்தார்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அது பில்லாவின் படத்தின் ரீமேக் ஆகியது.

இவ்வாறு சுவாரசியமான தகவலை விஜய் பட இயக்குனரான ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.