ராணா கல்யாணத்தில் விளையாடிய “கொரோனா”…. மூணு நாள் கொண்டாட்டத்திற்கு மொத்தமாய் ஆப்பு வச்சிடுச்சே…!

1115

இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதை மறுத்த ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ், எங்களது குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசும் “ரேகா” நிகழ்ச்சி தான் நடைபெற்றுள்ளது. அதற்காக தான் பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ராணா – மிஹீகா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருமண தேதியை தள்ளிவைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ராணா திருமணத்திற்காக திட்டமிட்டுள்ள ஐதராபாத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.


தெலங்கானாவில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எப்படி சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தெலங்கானாவில் ஐதராபாத் நகரம் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. எனவே திருமணத்தில் பங்கேற்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நலனை கருத்தில் கொண்டு ராணா வீட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். ராணாவின் திருமணம் தள்ளிப்போன செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர்.