லண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி!!

923

லண்டனில் கர்ப்பிணியான முன்னாள் காதலி மற்றும் அவர்களது பிறக்காத குழந்தையை கண்மூடித்தனமான தாக்குதலில் கொலை செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான ஆரோன் மெக்கென்சி என்பவர், தூக்கத்தில் இருந்த தமது முன்னாள் காதலி கெல்லி ஃபவ்ரெல்லின் படுக்கையறைக்குள் நுழைந்து, 21 முறை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஃபெவ்ரெல்லி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான அவர் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால் நான்கு நாட்களுக்கு பின்னர் மருத்துவமனையில் வைத்து அந்த குழந்தையும் மரணமடைந்துள்ளது.

மோட்டார் பைக் மீது ஈர்ப்பு கொண்ட ஃபெவ்ரெல்லி அதே ஈடுபாடு கொண்ட மெக்கென்சியுடன் நெருங்கி பழகியுள்ளார்.


ஆனால் இவர்களது இந்த உறவு கடந்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை மாற்றிக் கொள்ள ஃபெவ்ரெல்லியிடம் மெக்கென்சி கெஞ்சியுள்ளார்.

ஆனால் மெக்கென்சிக்கு உளவியல் ரீதியான உதவி தேவைப்படுவதாகவும், நமது குழந்தை தொடர்பாக மட்டுமே இனி பார்க்கவோ பேசவோ அனுமதிக்க முடியும் என ஃபெவ்ரெல்லி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த உறவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கடந்த மார்ச் மாதம் ஃபெவ்ரெல்லி தமது தாயாரிடமும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஜூன் 29 ஆம் திகதி நள்ளிரவில், ஃபெவ்ரெல்லியின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து மெக்கென்சி கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

ஃபெவ்ரெல்லியின் உடல் முழுவதும் மொத்தம் 21 ஆழமான காயங்கள் இருந்துள்ளது. இருப்பினும் பகலில் குழந்தையை பார்ப்பதற்காக மெக்கென்சி மருத்துவமனைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துவக்கத்தில் இந்த கொலைகளுக்கு தாம் பொறுப்பல்ல என தெரிவித்து வந்த மெக்கென்சி, இறுதியில் பொறாமையால் தாம் தாக்குதலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.