லண்டனில் ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்! அதன் பின் அவருடன் வந்த நபரின் திடீர் முடிவு!

943

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிரீன்விச்சின் பக்ஸ்பிஸ் வேயில் உள்ள ஹாலிடே விடுதியில், ஞாயிற்றுக் கிழமை 10 மணிக்கு பொலிசாருக்கு பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைக்கிறது.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற பின், அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அங்கு அவசர சேவை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் போன்றவை இருந்த போது, இந்த பெண்ணுக்கு தெரிந்தவர் என்று நம்பப்படும் ஒருவர் அந்த ஹோட்டலின் உயரத்தில் இருந்து திடீரென்று கீழே குதிக்கிறார். இதனால் அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஜோடி சனிக்கிழமை ஹோட்டலுக்கு வந்ததாக ஹாலிடே விடுதியின் பொது மேலாளர் உமர் கட்டாக்(38) பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு இருந்ததால் என்ஹெச்எஸ் ஊழியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல் திறந்த முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் பொது மேலாளர், என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. ஹோட்டலில் ஒரு ஊழியரிடமிருந்து அழைப்பு வந்த போது நான் வீட்டில் இருந்தேன்.

ஹோட்டல் குறிப்பிட்ட அறையில் இருந்து சிறிது சத்தம் வந்து கொண்டிருப்பதாகவும், அதைப் பற்றி வெவ்வேறு அறையில் தங்கியிருப்பவர்கள் தெரிவித்ததாகவும், அதன் பின்னரே பொலிசார் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக நாங்கள் நம்பவில்லை, இருப்பினும் எந்த ஒரு நபரும் இது குறித்து தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.