லண்டன் ஃபின்ஸ்பெரி பூங்காவில் வைத்து பலர் மீது கத்திக்குத்து! ஒருவர் கைது!

961

லண்டனில் உள்ள ஃபின்ஸ்பெரி பூங்காவில் வைத்து பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூங்காவில் நபர் ஒருவர் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டி வருவதாகவும், சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

 


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் சிகிச்சையளித்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“ஃபின்ஸ்பெரி பூங்காவில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது பலர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் சிகிச்சையளித்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.