லாக்டவுனில் செல்லப் பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் சமந்தா!

940

தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் 96 ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா, உடற்பயிற்சி, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.

லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா.


இந்நிலையில், வீட்டில் இருக்கும் இரு செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா சிக்கித் தவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இரு நாய்க்குட்டிகளும், நடிகை சமந்தா மீது ஏறிக் கொண்டு, பாசமாக விளையாடுகிறது.

இந்த க்யூட்டான வீடியோவை ரசித்து வைரலாக்கி வருகின்றனர் சமந்தா ரசிகர்கள். அதுசரி நடிகைகளும் செல்ல நாய்க்குட்டிகளும் காலம் காலமாக தொடரும் கலாச்சாரம் தானே இதிலென்ன இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.