வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்.. ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி : VJ ஸ்வேதாவை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!!

40

இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் உரிமையாளர், ஒளிப்பாதிவாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனலை திறந்து வைத்துக்கொண்டு காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் இதைத்தான் சொல்ல வேண்டும். இதை எல்லாம் சொல்லவே கூடாது என்றெல்லாம் கண்டபடி ஆபாச பேசி வருகின்றனர்.

அப்படித்தான் வீரா டாக் டபுள் எக்ஸ் என்ற யூடியூப் சேனலில் VJ ஸ்வேதா என்பவர் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசி முகம் சுளிக்க வைக்கும் டைட்டிலோடு அப்பலோடு செய்யப்படும் வீடியோக்களை கண்கொண்டு பார்க்கவும் முடியாது.

காது கொண்டு கேட்கவும் முடியாது. அடுத்த ஜெயிலுக்கு செல்ல யூடியூப் சேனலும் அதில் உள்ள ஆட்களும் ரெடியாகி விட்டார்கள் என வீடியோவுக்கு கீழே பலர் கமெண்ட்டுகளால் கழுவி ஊற்றினாலும் சுவேதா கடமையில் மட்டும் கண்ணாக இருந்தார்.

இந்நிலையில் இந்த பேட்டி குறிப்பிட்ட யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தான் அளித்த பேட்டியை தனது அண்ணன் மற்றும் உறவினர்களுக்கு பார்த்தால் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம்பெண் எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில் பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு சட்ட விரோதமாக இளம்பெண்ணின் பேட்டியை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் உரிமையாளர், சேனல் தொகுப்பாளர் ஸ்வேதா, ஒளிப்பாதிவாளர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.