‘கடாரம்கொண்டான்’ படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ”கோப்ரா” என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட படக்குழு, வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்,
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பை முந்தும் முயற்சியில் சீயான் விக்ரம் ஈடுபட்டிருக்கிறார். மற்றொருபுறம் அவரையே வீழ்த்தும் நோக்கத்துடன் களம் இறங்கியுள்ளார் அவருடைய மருமகன் அர்ஜுமன்.
விக்ரமின் தங்கை மகனான அர்ஜுன் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து காமெடி பிளஸ் திரில்லர் கதையம்சத்துடன் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்க உள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா நாயர், நிவேதா பட்டுலா, சாந்தினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் அர்ஜுமன் 5 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீயான் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த சேது படத்திலேயே அவர் இரண்டு கெட்டப்புகளில் தான் நடித்தார், ஆனால் மருமகனோ முதல் படத்திலேயே 5 கெட்டப்புகளில் நடித்து அசரடிக்கப்போகிறார்.