விஜய் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஷால் !

1008

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.

முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.


இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வரும் 22-ம் தேதி வெளியாகும் என விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 22-ம் தேதி தளபதி விஜய் பிறந்தநாள் என்பதால் அன்றைக்கு வெளியிடுகிறார் என்று விஷாலை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகர் விஷால் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.