விமான நிலையத்தில் வீடியோ எடுத்த யூட்ரியூபருக்கு நேர்ந்த சோகம்!!

44

வீட்டுக்கு ஒருத்தர், பிரபல யூ-ட்யூபர்களாக வலம் வருகிறார்கள். சமையல் செய்வதில் துவங்கி, அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஷாப்பிங் செய்வது, வீட்டுல சிப்ளிங்ஸ் அலப்பறை. எங்க அம்மா பெஸ்ட், என் தம்பி வொர்ஸ்ட் என்று விதவிதமாக ஐடியாக்களைப் பிடித்து யூ-ட்யூப்பிலும், இன்ஸ்டாவிலும் கலக்கி வருகிறார்கள்.

பாக்கெட் மணியையும் தாண்டி, தந்தையின் சம்பளத்திற்கு நிகராக ஹிட் அடிக்கிறவர்களும் உண்டு. அதே சமயம், என் வீடியோவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று உறவினர்களின் திருமண விசேஷங்கள் துவங்கி எப்போதும் கைகளில் செல்போனுடன் பார்ப்பவைகளை எல்லாம் வீடியோக்களாக பதிவு செய்து வெளியிடுகிற ஆர்வக்கோளாறு நபர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த செய்தியைத் தெரிஞ்சுக்கோங்க. பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூ-ட்யூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

யலஹங்காவைச் சேர்ந்த விகாஸ் கவுடா கைது செய்யப்பட்ட யூடியூபர். பாதுகாப்பு காரணங்களுக்காக தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் வீடியோ படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக வீடியோ ஒன்றை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் விகாஸ் கவுடா.


ஓடுபாதையில் ஒரு வீடியோவை படமாக்கி, அந்த வீடியோவில் நான் டிக்கெட் இல்லாமல் நுழைந்தேன். 24 மணி நேரமும் ஓடுபாதைக்கு அருகில் இருந்தேன். விமான நிலையத்திற்குள் நுழைந்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் வீடியோ எடுத்தேன் என்று கூறினார். இந்த வீடியோவை பார்த்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் விகாஸ் கவுடா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து விகாஸ் கவுடாவை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில், விகாஸ் கவுடா, விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் பெற்று உள்ளே சென்றேன். ஆனால் நான் விமானத்தில் பயணிக்காமல் ஓடுபாதையில் இருந்தேன். சுமார் 4-5 மணி நேரம் அங்கு தங்கியிருந்து வீடியோவை எடுத்துக் கொண்டு திரும்பியதாக கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.