விவாகரத்தாகி, 2 புள்ளைக்கு அப்பாவையா கல்யாணம் பண்ணப் போறனு கேட்டாங்க? பிரபல நடிகை ஓபன் டாக்!!

1075

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயதில் தைமூர் அலி கான் என்கிற மகன் உள்ளார். தைமூர் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தி தான். தைமூர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியே வருவார், எப்பொழுது அவரை புகைப்படம் எடுக்கலாம் என்று புகைப்படக் கலைஞர்கள் தினமும் காத்திருக்கிறார்கள்.

தைமூருக்கு ஏற்கனவே பல புகைப்படக் கலைஞர்களின் பெயர்கள் எல்லாம் தெரியும். தைமூரை மீடியா வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைக்க அவரை வெளிநாட்டில் படிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் கரீனா கபூர். சயிப் அலி கானின் இரண்டாவது மனைவி தான் கரீனா கபூர். சயிப் அலி கான் தன்னை விட வயதில் பெரியவரான நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்தார். அவர்களுக்கு சாரா அலி கான், இப்ராஹிம் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 24 வயதாகும் சாரா பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கரீனா கபூர் தன் கெரியரின் உச்சத்தில் இருந்தபோது தான் சயிப் அலி கானை திருமணம் செய்தார். அப்பொழுது அவரை பலரும் எச்சரித்துள்ளனர். ஆனால் கரீனா சயிப் தான் முக்கியம் என்று அவரை மணந்தார்.

இது குறித்து கரீனா கபூர் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் நடத்திய காபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூர் கூறியதாவது,


தற்போது மக்கள் காதல் பற்றி பேசுவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. நான் காதலித்து திருமணம் செய்தபோது அனைவரும், சயிப் அலி கானையா திருமணம் செய்யப் போகிறீர்கள், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், விவாகரத்தானவர் என்றார்கள். அப்படிப்பட்டவரை போய் திருமணம் செய்யப் போகிறீர்களா என்று கேட்டார்கள்.

சயிப் அலி கானை திருமணம் செய்தால் உங்களின் கெரியர் அவ்வளவு தான் என்றும் கூறினார்கள். காதலிப்பது இவ்வளவு பெரிய குற்றமா என்ன என எனக்கு தோன்றியது. திருமணம் செய்வதும் பெரிய குற்றமா?. திருமணம் செய்து தான் பார்ப்போம், என்ன தான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன் என்றார்.

திருமணத்திற்கு பிறகு கரீனாவின் கெரியர் முடிந்துபோய்விடவில்லை. அவர் தொடர்ந்து படங்கள், விளம்பர படங்களில் நடித்து வருகிறார். தைமூர் அலி கானை பெற்ற பிறகும் கரீனாவின் கெரியர் பாதிக்கவில்லை.

கரீனா கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதுடன், கணவருடன் சாப்பிட ஹோட்டல்களுக்கு சென்று வந்தார். மேலும் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அவர் கணவருடன் வெளியே வர ஆரம்பித்துவிட்டார். அதை பார்த்தவர்கள், இது என்ன பச்ச உடம்புக்காரி வீட்டில் இல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறார், வேலைக்கு செல்கிறார் என்று விளாசினார்கள். பிள்ளைகளை பெற்ற தாய்மார்களோ கரீனாவின் செயல்களை பார்த்து வியந்தார்கள்.

சயிப் அலி கானின் முதல் தாரத்து பிள்ளைகளான சாரா, இப்ராஹிம் கரீனா கபூரை ஏற்றுக் கொண்டுவிட்டனர். குண்டாக இருந்த சாரா தன் உடல் எடையை வெகுவாக குறைக்க கரீனா கபூர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கரீனா தான் சாராவை ஊக்குவித்து உடம்பை குறைக்க வைத்தாராம். அதே சமயம் சாரா கரீனாவிடம் நெருங்கிப் பழகுவது அம்ரிதா சிங்கிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.