வீட்டிற்கு பின்பு துருப்பிடித்த நிலையில் நான்கு பெட்டிகள்… திறந்த பார்த்த தம்பதிகளுக்கு கிடைத்த பேரதிர்ச்சி!

1043

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் கொல்லைப்புறத்தில் சில மரங்களுக்குப் பின்னால் துருப்பிடித்த உலோகத் துண்டுகளால் ஆன நான்கு பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் பழைமையாக இருந்த அந்த பெட்டியை இருவரும் திறக்க முயற்சி செய்துள்ளனர்.

மிகவும் சிரமப்பட்டு பெட்டியை திறந்தபோது பெரும் அ தி ர்ச் சி அவர்களுக்கு காத்திருந்தது. காரணம் அந்த பெட்டி உள்ளே 52,000 டொலர் பணம், தங்கம் மற்றும் வைரங்கள் போன்றவை அந்த பெட்டியின் உள்ளே இருந்துள்ளது.

இதனை பார்த்த அந்த தம்பதியினர் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த அவர்கள், நியூயார்க் நகர பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

பொலிசாரும் சுமார் 6 மாதங்கள் அந்த பெட்டியின் உரிமையாளரை தேடும் முயற்சியில் ஈடுபட்டும் அவர்களால் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனால் அந்த பெட்டியில் இருந்த பணத்தை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்த பொலிசார் மருத்துவமனை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை வழங்க உதவும் வகையில் அந்த பணத்தை வழங்கியுள்ளனர்.

மேலும், பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை அபகரிக்காமல் உரியவரிடம் சேர்க்க முயற்சி செய்த அந்த தம்பதியினருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.