இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்தேவ் (25). இவர் மனைவி ஆர்த்தி. ஆர்த்தி கடந்த மாதம் 24ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இதையடுத்து ஜக்தேவ் பொலிசில் தனது மனைவி காணவில்லை என புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஆர்த்தில் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் ஜக்தேவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தார்.
இதையடுத்து தனது வீட்டில் நேற்று முன் தினம் ஜக்தேவ் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை ஜக்தேவ் வீட்டுக்கு அவர் மாமா ராமு வந்த பார்த்த போது ஜக்தேவ் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ஜக்தேவ் சடலத்தை கைப்பற்றிவிட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.