வீட்டில் எந்தெந்த பொருள் எந்தெந்த இடத்தில் இருந்தால் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் சேரும் தெரியுமா?

2512

குடும்பத்திற்காக தினமும் வேலைக்கு சென்று வருபவர்கள் பல இன்னல்களை மேற்கொள்கிறார்கள்.

இன்றைய நிலையில் உடல்நலத்தையும்,செல்வத்தை சேமித்து வைப்பதற்கும்,மன அமைதிக்காகவும் இந்த வாஸ்து டிப்ஸ் உதவுகிறது.

தவறுகள்

  • வீட்டின் வடகிழக்கு மூளையில் ஏதேனும் குறைபாடுற இருந்தால்,அது நம்மை மன உறுதியற்ற நிலைக்கு மாற்றிவிடும் என்பது கட்டிடக் கலையின் சாஸ்திரம்.
  • இந்த அபாயத்தைத் தவிர்க்க வடகிழக்கு பகுதியை சுத்தமாகவும் சிக்கல்கள் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம்.
  • அதேபோன்று கழிப்பறைகள், செப்டிக் டேங்க், ஹெவி ஸ்டோரேஜ் மற்றும் குப்பை வாலி ஆகியவை இப்பகுதியில் இருக்கக்கூடாது. மறுபுறம், நீர் கூறுகள், குளியலறைகள், மற்றும் நுழைவாயில்கள் ஆகியவை வடகிழக்கில் அமைந்தால் மனத்தி.

  • நேர்மறை எண்ணங்கள் தோன்றும் அதே போன்று உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கட்டிடக்கலையில் கூறப்படுகிறது.
  • வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் அதிக நீட்டிப்பு இருந்தால் அது நல்லதல்ல. வடக்கிழக்கு மூலையில் பெரும் அரிப்பு ஏற்பட்டால் அது வீட்டில் உள்ளவர்களை மன விரக்திக்குக் கூட்டிச் செல்ல வழிவகுக்கும்.
    ​வீட்டில் செடிகளை எங்கே நடுவது?
  • வீட்டின் கிழக்கு பகுதியில் செடிகள் உயரமாக வளர்ந்திருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மன நல பிரச்சனைகள் தோன்றுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டின் கட்டமைப்பைப் பின்பற்றி ஒரு கட்டிடக் கலைஞரின் உதவியைப் பெறுவது நல்லது.

  • நீர் சேமிப்புகள்
  • நீர் சேமிப்பிடங்களை தென்கிழக்கு மூலையில் வைத்திருத்தால் அது மன அமைதியை சீர்குலைத்துவிடும். அதாவது நீர்த் தேக்கத் தொட்டியோ அல்லது, ரெடிமேடாக வைத்திருக்கும் டேங்க் ஆக இருந்தாலும் சரி அது தென்கிழக்கு மூலையில் இருப்பது தான் சரி.
  • அமைதியும் நம்பிக்கையும்
  • வீட்டின் தெற்கில் சரியான கட்டிடக்கலை அமைந்திருந்தால்,குடியிருப்பாளர்களின் அமைதி மற்றும் நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. தெற்கில் சிவப்பு நிறம் இருந்தால், அது மன ஆறுதலை அதிகரிக்கச் செய்யும்.

படுக்கையறை


வீட்டின் தென்மேற்கு பகுதி மன உறுதிப்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே இந்த பகுதியில் ஒரு மாஸ்டர் படுக்கையறை இருந்தால், மனம் ஒரு நிலைப்படுதல், தலைமைத்துவம் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை உறுதி செய்கிறது.

​பூஜை அறை

தெற்கு மற்றும் தென்மேற்கில் உங்கள் பூஜை அறை அமைந்தால் அது உங்களின் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் தடைகளை உருவாக்கிவிடும், இருப்பினும் அதை உடனடியாக வடகிழக்கு மூளையை நோக்கி மாற்றி அமைத்தால் எல்லா தடைகளும் நீங்கிவிடும்.

​கழிவறை

தெற்கே நீல நிற ஒளி அமைப்பு அல்லது ஏதேனும் ஒரு அறைக்கு தெற்கு மூலையில் கழிப்பறை அமைந்தாலோ, வாழ்க்கையில் கவனச்சிதறலை ஏற்படுத்தி சிக்கல்களை உண்டாக்கிவிடும்.