வீட்டில் பணம் நிலைக்கவில்லையா? இந்த ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!

1354

சிலரின் வீட்டில் பண வரவு சிறப்பாக இருந்தாலும், ஆனாலும் ஏதேனும் ஒருவகையில் செலவாகிவிடுகிறது அதனால் அவர்கள் சதா பணப்பிரச்னை என புலம்பிக் கொண்டிருப்பார்கள். இதன் காரணத்தால் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை கலங்கடித்துக் கொண்டே இருக்கும். இப்படி வீட்டில் இருக்கும் பணப்பிரச்னையை தீர்க்க ஜோதிடத்தில் சொல்லப்பட்ட சில எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்…

மகிழ்ச்சி வீட்டில் இருக்கும்

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு பெளர்ணமி நாளிலும், காலையில் அரச மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி வழிபடவும், பின் வீட்டில் விளக்கேற்றி லட்சுமி தேவியை அவருக்குரிய மந்திரத்தை ஜெபித்து வழிபடவும். ஒவ்வொரு மாதமும் இதைச் செய்வதன் மூலம் அனைத்து நிதி சிக்கல்களும் அகற்றப்பட்டு அமைதியும் நிம்மதியும் ஏற்படும்.

பணம் வீட்டில் தங்கும்


அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ ஆகியவை வைக்கவும். சனிக்கிழமைகளில் இதைச் செய்வதன் மூலம், உங்கள் நிதிப் பிரச்சினை நீங்கி பணமும், தானியமும் பெருகும்.

கடவுள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரக் கூடிய சனிக்கிழமைகளில் ஒரு ரூபாயை ஒரு சிறிய சிவப்பு துணியில் வைத்து கட்டி அதை ராதா கிருஷ்ணா சிலை அல்லது உங்களுக்கு விருப்பமான சிலை அல்லது படத்திற்கு பின்னால் வைத்து உங்கள் விருப்பத்தை, வேண்டுதலை இறைவனிடம் வைக்கத் தொடங்கவும். இப்படியே 41 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

நிதி சிக்கல்கள் நீங்கும்

ஒரு நல்ல நாளில் அதிகாலையில் எழுந்து நல்ல நேரத்தில் ஒரு சிவப்பு பட்டுத் துணியை எடுத்து அதில் 21 தானியங்களையும், நெல் மணிகளையும், சிறிது அரிசி சேர்த்து கட்டுங்கள். இதற்குப் பிறகு, லட்சுமி தேவியை வணங்கி, அந்த பொருட்களை கட்டி வைத்த பட்டு துணியை வைத்து வணங்குங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்கள் நிதிப் பிரச்சினை தீரும்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க

ஜோதிடத்தின் படி, வீட்டில் தினமும் அன்னை காளியை நினைத்து வணங்கி, வெள்ளிக்கிழமைகளில் காளி கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். காளி போற்றியை பாடி வணங்கலாம். இதைச் செய்வதன் மூலம், எதிர்மறை ஆற்றல் உங்கள் மனதிலும், வீட்டிலும் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.