வீட்டை விட்டு வெளியேறிய மனைவி வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

1150

இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அழுத்தத்தில் கணவன், தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் Nalasopara நகரை சேர்ந்தவர் கைலாஷ் பர்மர். இவர் மனைவி மனிதா. இந்த தம்பதிக்கு நயன் (12), நந்தினி (8) மற்றும் நாயனா (3) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் கைலாஷ் – மனிதா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்து 45 நாட்களுக்கு முன்னர் மனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த சூழலில் நேற்று கைலாஷ் வீட்டின் அருகில் வசிக்கும் அவர் தந்தை விஜு தனது மகனை பார்க்க இரவு 8.30 மணிக்கு வந்தார்.


அவர் கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அருகில் வசிக்கும் நபர்களுடன் சேர்ந்து விஜு கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு கைலாஷ் மற்றும் மூன்று குழந்தைகளும் சடலமாக கிடந்தனர்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போது மூன்று குழந்தைகள் கழுத்திலும் வெட்டு காயம் இருப்பது தெரிந்தது. மூன்று பேரையும் கொலை செய்துவிட்டு கைலாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்துள்ளார் கைலாஷ், இதோடு மனிதா வேறு நபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்துவிட்டு மேலும் மன அழுத்தம் அடைந்துள்ளார்.

இதையடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளார் என கருகிறோம், சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.