வெளிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கையர்கள் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
குவைட் , டுபாய் , அபுதாபி , சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர்களே இவ்வாறாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்காக வழக்கப்பட வேண்டிய காப்புறுதி கொடுப்பனவுகள் , நிலுவை சம்பளம் உள்ளிட்டவற்றை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பணியகம் தெரிவித்துள்ளது.