வெளிநாட்டில் இந்திய மாணவி ஒருவர் பரிதாப மரணம் : பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

68

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதியதில் 25 வயதான குந்திப்பள்ளி சௌமியா சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக செளமியா சென்றுள்ளார். தற்போது வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சௌமியா இறந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததாகவே கூறப்படுகிறது. தற்போது அவரது உடலை மீட்டுவர மத்திய மாநில அரசாங்கத்திற்கு பெற்றோர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.