டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர்.
தொழில்நிமிர்த்தம் அங்கு சென்று நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 எனும் விசேட விமானத்திலேயே அவர்கள், இன்று (18) காலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர். அந்த விமானத்தில் மொத்தமாக 290 பேர் வருகைதந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்தே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.