வெளிநாட்டில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன்! பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி!!

969

இந்தியாவை சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியை கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், Monippally-ஐ சேர்ந்தவர் Merin Joy. 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இருக்கும் Broward Health Coral Springs மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

அதன் பின் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக Philip Mathew என்ற 34 வயது நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.


மேலும் இந்த சம்பவம் குறித்து Coral Springs காவல்துறை துணைத் தலைவர் Brad McKeone கூறுகையில், அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் Merin Joy மற்றும் அவரின் தாய் Philip Mathew-வை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், Philip Mathew தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.