வெளுத்து வாங்கிய கனமழையில் அசால்ட்டாக அடித்துச் செல்லப்பட்ட பாலம்…! தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி!!

1061

உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர், நைனிடால் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது.

இதனால் கோரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமான் என்ற இடத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


மதன்கோட் என்ற இடத்தில் சிறிய பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.