ஹஜ் பயணம் ரத்து.. சவூதி அரேபியா வரலாற்றில் முதல்முறை..! கொரோனாவை சமாளிக்க அதிரடி முடிவு..!

985

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,00,000’ஐத் தாண்டிய பின்னர், 1932’ஆம் ஆண்டில் தற்போதைய அரச பரம்பரை நிறுவப்பட்ட பின்னர் முதல் முறையாக வருடாந்திர ஹஜ் யாத்திரையை ரத்து செய்வது குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தில் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்திற்குள் ஒரு முறையான முடிவு எடுக்கப்படும்” என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் அதிகாரி கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய சடங்குகளைச் செய்வதற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் அப்போது சவூதி அரேபியாவிற்கு வருகிறார்கள்.

ஹஜ் நகருக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைப்பதையும் சவுதி அரேபியா பரிசீலிக்கலாம். உலகின் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, ஹஜ்ஜில் தனது குடிமக்கள் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தோனேசியாவிலிருந்து சுமார் 2,20,000 பேர் ஆண்டுதோறும் ஹஜ்ஜில் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்க்கு யாத்ரீகர்களை அனுப்பப்போவதில்லை என்பதை மலேசியாவும் உறுதிப்படுத்தியது. சிங்கப்பூர், கம்போடியா, தாய்லாந்து மற்றும் புருனே ஆகிய நாடுகளும் ஹஜ் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.